கடந்த மூன்று அத்தியாயங்களில், முதல் நூற்றாண்டில் தேவனுடைய சித்தத்தின்படி ரோமப் பேரரசுக்கும் இந்தியாவுக்கும் இடையே உருவான கடல்வழி வணிகம், சுவிசேஷம் பரவுவதற்கான ஒரு பாலமாக எவ்வாறு அமைந்தது என்பதைக் கண்டோம்.அப்போஸ்தலரான தோமா இந்திய மண்ணில் விசுவாசத்திற்கான அழியாத அஸ்திபாரத்தை இட்டதையும், அவருடைய பணி பரந்த பார்த்தியப் பேரரசு வரை நீண்டிருந்ததையும் கண்டோம். ஆனால், அவர் விதைத்த அந்த விசுவாச விதைக்கு என்ன ஆனது? இந்தியாவிற்கும் கிழக்கு திருச்சபைக்கும் இடையேயான அந்தத் தொடர்பு தொடர்ந்ததா? சுமார் இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அந்த ஆவிக்குரிய உறவு எவ்வளவு வலிமையாக இருந்தது என்பதை வெளிப்படுத்தும் பாஸ்ரா பிஷப்பின் பயணத்தை இந்த அத்தியாயத்தில் காண்போம்
பிஷப் டூடியின் அறிமுகம்
பாஸ்ராவின் (Basra) பிஷப் தாவீது (David) (டூடி), தனது மக்களுக்கு ஆவிக்குரிய மேய்ப்பராக இருந்தவர். மூன்றாம் மற்றும் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கிறிஸ்தவ பெருநகர பிஷப், கிறிஸ்துவின் நற்செய்தியை புதிய தேசங்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஆவிக்குரிய அழைப்பால் உந்தப்பட்டார். கி.பி. 300-ல் (சில ஆதாரங்கள் 295 என்கின்றன) அவர் இந்தியாவில் மிஷனரி பணியை மேற்கொண்டார். இந்தியாவிற்கு வந்த ஆரம்பகால கிறிஸ்தவ மிஷனரிகளில் அவர் ஒருவராக அறியப்படுகிறார்.
இன்றைய ஈராக்கின் (Iraq) தெற்கு பகுதியில் பாரசீக வளைகுடா (Persian Gulf) அருகில் அமைந்துள்ள பாஸ்ரா நகரம் (Basra) (பாஸ்ரா என்பது ஈராக் நாட்டின் ஒரு நகரமாகும். இது ஒரு முக்கிய துறைமுக நகரமாகவும் உள்ளது) அன்றைய காலத்தில் முக்கியமான வணிக மையமாக விளங்கியது. இந்த நகரம் மேற்கு ஆசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வணிகத்தையும் கலாச்சார பரிமாற்றத்தையும் தொடர்பு கொள்ளும் முக்கிய பாலமாக செயல்பட்டது.
நற்செய்தியின் இந்திய பயணம்
வரலாற்று ஆய்வாளர் மிங்கானா (Mingana) தனது ஆராய்ச்சியில் சாஅர்ட் வரலாற்றில் (Chronicle of Sa'ard) இருந்து ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை மேற்கோள் காட்டியுள்ளார். இந்த வரலாற்றுப் பதிவு, கிறிஸ்தவ சபையின் ஆரம்பகால இந்திய தொடர்பை வெளிப்படுத்தும் அரிய சான்றுகளில் ஒன்றாகும்.
அதன்படி, பேட்ரியார்க் ஷாலுஃபா (Shahlufa) மற்றும் பாப்பா (Papa) ஆகியோர் தலைமை வகித்த காலகட்டத்தில், பாரசீக வளைகுடாவில் (Persian Gulf) அமைந்திருந்த பாஸ்ராவின் (Basra) பிஷப் டூடி, தனது பிஷப் பதவியை விட்டு ஒரு மகத்தான முடிவை எடுத்தார். புகழ்பெற்ற அறிஞரான அந்த பிஷப், இந்தியா நோக்கிய நற்செய்திப் பயணத்தை மேற்கொண்டார்.
கிழக்கு சிரியன் சபை
கிறிஸ்துவின் அன்பையும் மீட்பின் செய்தியையும் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆழமான விசுவாசத்தின் வெளிப்பாடாக இருந்தது. இந்தியாவில் நெஸ்தோரியன் (Nestorian) கிறிஸ்தவர்கள் தலைமையில் பிஷப் டூடி (Bishop David) பாஸ்ராவில் (Basra) இருந்து பாரசீக (Persian) கிறிஸ்தவ குடியேறியவர்கள் மற்றும் மிஷனரிகளுடன் 295/300-ல் கேரளாவில் குடியேறியதாக கிறிஸ்தவர்களின் ஆரம்பகால தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இடைக்கால காலத்தில் கிறிஸ்தவம் நாடு முழுவதும் பரவியிருந்தது என்பதை நாம் அறிவோம். கிழக்கு சிரியன் (East Syrian) மிஷனரிகள் நற்செய்தி பரப்பும் நோக்கத்துடன் இந்தியாவிற்கு வந்த பல நிகழ்வுகள் உள்ளன. திருச்சபை என்பது குறிப்பிட்ட எல்லைகளுக்குள் சுருங்கி நிற்கும் அமைப்பு அல்ல; அது பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் இயங்கும் ஒரு உலகளாவிய வெளிப்பாடாகும்
பாரசீகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான உறவு
பாரசீக வளைகுடா (Persian Gulf) வழியாக கடல் வணிகம் செழித்து வளர்ந்தது, அரபு கப்பல்கள் தெற்கே மடகாஸ்கர் (Madagascar) வரையும் கிழக்கே சீனா (China), கொரியா (Korea) மற்றும் ஜப்பான் (Japan) வரையும் வணிகம் செய்தன. இந்த வணிக வழிகள் பாரசீக வளைகுடாவிற்கும் (Persian Gulf) மலபார் கடற்கரைக்கும் (Malabar Coast) இடையே எளிதான தொடர்பை சாத்தியமாக்கின. தேவன் தனது நற்செய்தி பரவுவதற்காக உலக நிகழ்வுகளையும், வணிக வழிகளையும் பயன்படுத்துகிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிறிஸ்தவர்கள் பாரசீக வளைகுடா (Persian Gulf) கடற்கரையை அடைந்தனர்..
நற்செய்தி பரவலின் வரலாற்று மற்றும் இறையியல் முக்கியத்துவம்
பிஷப் டூடி தனது உயர் பதவியையும், வசதியான வாழ்க்கையையும் கிறிஸ்துவுக்காக விட்டு விட்டு, இரட்சகரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இந்தியாவிற்குப் பயணம் செய்தது ஒரு மிகப்பெரிய செயலாகும். அவர் கி.பி. 295-300-ல் இந்தியாவிற்கு சென்று அங்கு பல மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். அவரது பணி நைசியா சபை (Council of Nicaea) (325 கி.பி.) நடைபெறுவதற்கு முன்பே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது, கிறிஸ்தவ விசுவாசம் ரோமானிய (Roman) பேரரசின் அரசியல் நிகழ்வுகளிலிருந்து சுதந்திரமாக, பரிசுத்த ஆவியின் வல்லமையால் கிழக்கத்திய நாடுகளிலும் பரவி வந்தது என்பதை ஆணித்தரமாக காட்டுகிறது.
இந்திய கிறிஸ்தவத்தின் பண்டைய வேர்கள்
இந்தியாவில் கிறிஸ்தவம் என்பது பிற்காலத்தில் வந்த அந்நிய ஆட்சியின் விளைவு அல்ல. அதற்கு மாறாக, அதன் வேர்கள் மிகவும் பழமையானவை; அப்போஸ்தலர்களின் காலம் வரை நீள்கின்றன. அப்போஸ்தலர்கள் விதைத்த இந்த விசுவாசத்தை, பழங்கால திருச்சபையின் பாரம்பரியம் தொடர்ந்து வளர்த்து வந்தது. பிஷப் டூடியின் பணி, இந்த இடைவிடாத கிறிஸ்தவ சாட்சியப் பயணத்தின் ஒரு தொடர்ச்சி என்பதற்குச் சிறந்த சான்றாகும்.
· அப்போஸ்தலர் தோமா (St. Thomas the Apostle) (முதல் நூற்றாண்டு) - விசுவாசத்தின் விதை
· அலெக்ஸாண்ட்ரியாவின் பாந்தெனஸ் (Pantaenus of Alexandria) (இரண்டாம் நூற்றாண்டு) - இறையியல் உரையாடல்
· கொஸ்மாஸ் இண்டிகோப்ளூஸ்தெஸ் (Cosmas Indicopleustes) (he was a 6th-century traveller who made several voyages to India during the reign of emperor Justinian ) (ஆறாம் நூற்றாண்டு) - வரலாற்றுப் பதிவு
பிஷப் டூடியைப் போன்றோர் தங்கள் சொந்த இடங்களை விட்டுப் புறப்பட்டுச் சென்றதன் இறையியல் அடிப்படை ஆழமானது. நற்செய்தியைக் கேட்காத மக்கள் அதை எப்படி விசுவாசிக்க முடியும் என்ற கேள்விக்கு, அவர்களின் பயணங்களே பதிலாக அமைந்தன. அனுப்பப்பட்ட ஒருவரின் தியாகமும், நற்செய்தியை அறிவிக்கும் அழகும் இந்த வசனங்களில் தெளிவாகின்றன.
"அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவாகள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள் சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே."(ரோமர் 10:14-15)
குறிப்புகள்:
- Chronicle of Sa'ard. Cited in William G. Young, Handbook of Source Materials for Students of Church History, p. 27.
- David of Basra - Wikipedia, 2024
- Church of the East - Wikipedia, 2025
- Christianity in Eastern Arabia - Wikipedia, 2025
- Religion Online - Chapter 7: Christianity in India up to AD 1500
தொடர்ந்து பயணிப்போம்....
படைத்தவரின் பாதையில்,
திருமதி. ரெமினா சுஜித்
