கிறிஸ்தவம் முதன்முதலாக இந்தியாவின் உள்பகுதிகளை எப்படி எட்டியது என்பது ஒரு சாகசக் கதையைப் போல இருந்தாலும், இது ஒரு வரலாற்று நிகழ்வாகும். இந்த அற்புதமான வரலாறை கிறிஸ்தவ வரலாற்றாசிரியரான அக்விலேயாவின் ருஃபினுஸ் (Rufinus of Aquileia, கி.பி. 345-410) பதிவு செய்துள்ளார். இது நம்மை நான்காம் நூற்றாண்டிற்கு, மன்னன் கான்ஸ்டன்டைன் (Constantine) காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. அப்போஸ்தலர்களான தோமா, பார்த்தியர்களுக்கும் (Parthians), மத்தேயு, எத்தியோப்பியாவுக்கும் (Ethiopia), பர்தொலோமேயு (Bartholomew) இந்தியாவுக்கு அருகிலுள்ள பகுதிக்கும் சென்றிருந்தாலும், பல மொழிகள் பேசும் மக்கள் வாழ்ந்த "உள்பகுதி இந்தியா" (interior India) மன்னன் கான்ஸ்டன்டைன் காலத்திற்கு முன்பு வரை கிறிஸ்தவ போதனையால் ஒளியூட்டப்படவில்லை என்று ருஃபினுஸ் குறிப்பிடுகிறார். இரு இளைஞர்களின் சோகமான சூழ்நிலைகள், கிறிஸ்துவின் செய்தி அந்தப் புதிய நாட்டிற்குள் செல்வதற்கான வாசலாக எப்படி மாறியது என்பதே இக்கதையின் மையம். "அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்" (ரோமர் 8:28) என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.
வணிகனின் பயணம் மற்றும் துயரத்திலிருந்து வெற்றிக்கு
மெரோபியஸ் என்ற ஒரு தத்துவஞானி பற்றியது. இவர் தைர் (tyre) நகரத்தைச் சார்ந்தவர் (இது இன்று லெபனான் நாட்டில் உள்ள ஒரு பழைய துறைமுக நகரம்). அவருக்கு முன் இந்தியாவிற்குப் பயணம் செய்த மெட்ரோடோரஸ் (Metrodorus) என்ற தத்துவஞானியின் முன்மாதிரியால் தூண்டப்பட்டு, இந்தியத் துணைக் கண்டத்தை ஆராய அவர் விரும்பினார். தன்னுடன் கிரேக்க மொழியில் தேர்ச்சி பெற்ற இரு இளம் வாலிபர்களை (ஃபுரும்மென்ட்டியஸ் (Frumentius) மற்றும் எடேஸியஸை (Edesius)) அழைத்துச் சென்றார். அவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பயணம் ஒரு முழு பிராந்தியத்தின் ஆவிக்குரிய நிலப்பரப்பை மாற்றும் தேவனின் மகத்தான திட்டத்தின் ஒரு பகுதியாக மாறும் என்பதை அறிந்திருக்கவில்லை. அவர்களின் வரலாறு நமக்கு நீதிமொழிகள் 16:9-ன் வசனத்தை நினைவூட்டுகிறது: " மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்."
இந்தியாவை அடைந்ததும், மெரோபியஸ் (Meropius) மற்றும் இரு வாலிபர்களும் எதிர்பாராத சோகத்தை எதிர்கொண்டார்கள். சற்று காலத்திற்கு முன்புதான் ரோமர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையேயான ஒப்பந்தம் மீறப்பட்டிருந்தது. இதனால் கோபமடைந்த இந்தியர்கள், கப்பலில் இருந்த மெரோபியஸையும் (Meropius) மற்ற பயணிகளையும் கொன்றார்கள். ஆனால், ஃபுரும்மென்ட்டியஸ் (Frumentius) மற்றும் எடேஸியஸின் (Edesius) இளம் வயதைக் கண்டு இரக்கப்பட்டு, அவர்களை மட்டும் உயிரோடு விட்டு, இந்திய அரசனுக்குப் பரிசாக அனுப்பினார்கள்.
முழு பேரழிவான முடிவு போல் தோன்றியது உண்மையில் இந்த இளைஞர்களைத் தேவனுக்குத் தேவையான இடத்தில் நிலைநிறுத்துவதற்கான அவரின் வழியாக இருந்தது. இந்த இரு இளைஞர்களும் இந்திய அரசனுக்குப் பரிசுகளாக வழங்கப்பட்டார்கள். வேதாகமம் முழுவதும் காண்பது போல, தேவன் மிகவும் சாத்தியமில்லாத சூழ்நிலைகளைப் பயன்படுத்தித் தன் மக்களை ராஜ்ய நோக்கங்களுக்கு நிலைநிறுத்துகிறார். எகிப்தில் யோசேப்பின் அடிமைத்தனத்தை அவர் தன் மக்களைக் காப்பாற்றப் பயன்படுத்தியதைப் போல (ஆதியாகமம் 50:20), இவர்களின் சிறையிருப்பும் ஒரு பெரிய நோக்கத்திற்காக அமைந்தது.
அரச அரண்மனையில் பாலங்களைக் கட்டுதல்
இந்திய அரசன் இந்த கிரேக்க மொழி பேசும் இளைஞர்களின் தோற்றத்தையும் நடத்தையையும் கண்டு பிரமித்து, அவர்களை நம்பிக்கையான பதவிகளில் நியமித்தார். எடேஸியஸ் (Edesius) அரசனுக்குப் பானம் வழங்கும் பான பாத்திரகாரனாகவும் (cup-bearer), ஃபுரும்மென்ட்டியஸ் (Frumentius) அரச பதிவேடுகளைப் பராமரிப்பவராகவும் (custodian of royal records) ஆனார். பாபிலோனில் (Babylon) தானியேலைப் (Daniel) போலவோ, எகிப்தில் (Egypt) யோசேப்பைப் (Joseph) போலவோ, இந்த இளைஞர்கள் வெளிநாட்டு அரசவையில் கர்த்தரின் கிருபையால் தயவு கண்டார்கள்.
அரசன் இறந்தபோது, அவரின் இளம் மகனையும் அவரின் தாயை பாதுகாவலராகவும் விட்டுச் சென்றார். அரசி, அந்த இளைஞர்களிடம், தன் மகன் இராஜ்யத்தின் பொறுப்புகளை கவனிக்கும் அளவிற்கு வயதை எட்டும் வரை, இராஜ்யத்தின் நிர்வாகத்தை (administration of the kingdom) ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார். இந்தப் பொறுப்பில் இருந்தபோது, ஃபுரும்மென்ட்டியஸ் (Frumentius) தன் ஆவிக்குரிய தாகத்தால் உந்தப்பட்டு, அந்த நாட்டுடன் வர்த்தகம் செய்த ரோம வணிகர்களிடையே (Roman merchants) கிறிஸ்தவர்களைத் தேடத் தொடங்கினார்.
இந்திய சபை மற்றும் ஊழியத்திற்கான அழைப்பு
கிறிஸ்தவ வணிகர்களைக் கண்டுபிடித்ததும், ஃபுரும்மென்ட்டியஸ் (Frumentius) அவர்களை ஒன்றுதிரட்டி, முறையான கிறிஸ்தவ ஆராதனைகளை ஒழுங்குபடுத்த ஊக்குவித்தார். அவர் இந்த விசுவாசிகளை கிறிஸ்தவ ஆராதனைகளுக்காக சில பொருத்தமான இடங்களைத் தேர்ந்தெடுக்க ஊக்கப்படுத்தினார். இதன் விளைவாக, இந்தியாவின் உள்பகுதியில் ஒரு ஜெபஆலயம் கட்டப்பட்டது. மேலும், ஃபுரும்மென்ட்டியஸ் (Frumentius) சில இந்தியர்களுக்கும் கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் போதித்து, அவர்கள் ஆராதனையில் பங்கேற்கத் தகுதியுள்ளவர்களாக்கினார்.
இளம் அரசன் இராஜ்யத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் காலத்தை அடைந்தபோது, ஃபுரும்மென்ட்டியஸும் (Frumentius) எடேஸியஸும் (Edesius) அவரிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு தங்கள் நாட்டிற்குத் திரும்ப அனுமதி கேட்டார்கள். எடேஸியஸ் (Edesius) தன் பெற்றோர்களையும், உறவினர்களைக் காண டைருக்குத் (Tyre) திரும்பினார், ஆனால் ஃபுரும்மென்ட்டியஸ் (Frumentius), இந்தியாவில் நற்செய்திப் பணிக்கான தேவையை உணர்ந்து, அலெக்ஸாண்டிரியாவுக்குச் (Alexandria) சென்றார். அங்கே, அவர் அக்காலத்தின் சபை தலைவரான, அப்போதுதான் சமீபத்தில் பேராயராக நியமிக்கப்பட்டிருந்த அதனாசியஸைச் (Athanasius) சந்தித்தார்.
இந்தியாவில் கிறிஸ்தவ வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளைக் கேட்ட பேராயர் அதனாசியஸ் (Athanasius), ஃபுரும்மென்ட்டியஸையே (Frumentius) அந்தப் பேராயராக தேர்ந்தெடுத்தார். "தகுதியானவர் வேறு யாரையும் நியமிக்க முடியாது" என்று கூறி, அவரை இந்தியாவின் பேராயராக (Bishop) நியமித்து அபிஷேகம் செய்தார்.
இந்தியாவுக்குத் திரும்புதல்: நற்செய்தி வேரூன்றுகிறது
பேராயரின் அதிகாரத்துடனும் சபையின் ஆசீர்வாதத்துடனும், ஃபுரும்மென்ட்டியஸ் (Frumentius) இந்தியாவுக்குத் திரும்பினார். அவர் இப்போது ஒரு முன்னாள் அரச நிர்வாகி மட்டுமல்ல, தேவனின் மந்தையைக் காத்து வழிநடத்த நியமிக்கப்பட்ட மேய்ப்பராக இருந்தார். அவர் திரும்பியதும், "அங்கே நற்செய்தியின் பிரசங்கியானார்." கிறிஸ்துவின் பெயர் பரவலாக அறியப்படாத ஒரு நாட்டில் மகா கட்டளையை நிறைவேற்றினார்.
வரலாற்றுக் குறிப்பு அவர் "பல தேவாலயங்களைக் கட்டினார்" என்று கூறுகிறது. இது கிறிஸ்தவம் கணிசமாக வளர்ந்ததைக் குறிக்கிறது. மிக முக்கியமாக, ஃபுரும்மென்ட்டியஸ் (Frumentius) "கர்த்தர் அநுக்கிரகத்தினால் உதவப்பட்டு, பலரின் ஆத்துமாக்களுடன் சேர்த்து உடல் நோய்களையும் குணப்படுத்தி பல அற்புதங்களைச் செய்தார்." இந்த அற்புதமான கிரியைகள் அவரின் பணிக்கு மேலான உறுதிப்பாட்டைக் கொடுத்தன. அவரின் பணி, நற்செய்தி வழங்கும் முழுமையான மீட்பை பிரதிபலித்தது.
ஃபுரும்மென்ட்டியஸின் (Frumentius) வரலாறு, தன் நோக்கங்களை நிறைவேற்றுவதில் தேவனின் இறையாண்மைக்கும் விசுவாசத்திற்கும் ஒரு வல்லமையான சாட்சியமாக நிற்கிறது. ஒரு சோகமான கப்பல் விபத்தாகத் தொடங்கியது, ஒரு முழு பிராந்தியம் நற்செய்தியைக் கேட்க வழிவகுத்தது. தேவனின் திட்டங்கள் மனித சூழ்நிலைகளால் கட்டுப்படுத்தப்படாது என்பதை இது நிரூபிக்கிறது. சாதாரண அனுபவங்களின் மூலம் தேவன் தன் ஊழியர்களை எப்படித் தயார்படுத்துகிறார் என்பதையும், எந்தச் சூழ்நிலையிலும் விசுவாசமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் இது காட்டுகிறது. ஃபுரும்மென்ட்டியஸின் (Frumentius) பணியின் மூலம் இந்தியாவின் உள்பகுதியில் கிறிஸ்தவம் நிறுவப்பட்டது, "சமுத்திரம் ஜலத்தில் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்." (ஏசாயா 11:9) என்ற கர்த்தருடைய வார்த்தையின் நிறைவேற்றமாக அமைகிறது.
தேவனுக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக!!!
தொடர்ந்து பயணிப்போம்....
படைத்தவரின் பாதையில்,
திருமதி. ரெமினா சுஜித்
குறிப்புகள்
· Socrates,EcclesiasticalHistory,1.XIX.Niceneand Post-NiceneFathers, Vol.II,p.23.
· The Fathers of the Church, vol. 133. Washington, D.C.: The Catholic University of America Press, 2016.
