கி.பி. 306-372 இல் வாழ்ந்த எப்ராயிமின் பாடல்கள்
கிறிஸ்தவ சபையின் புகழ்பெற்ற கவிஞரான எப்ராயிம், எதெஸ்ஸாவில் (Edessa is the name of two distinct cities: an ancient city in Upper Mesopotamia, now known as Şanlıurfa, Turkey, and a city in Central Macedonia, Greece) பத்து ஆண்டுகள் கழித்தார். அங்கே அப்போஸ்தலர் தோமாவின் எலும்புகள் அடக்கம் செய்யப்பட்டிருந்தன என்று வரலாறு கூறப்படுகிறது. அவரது நிசிபீன் பாடல்கள், இந்தியாவிலிருந்து எதெஸ்ஸாவிற்கு அந்த எலும்புகள் கொண்டு வரப்பட்டதைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்துகின்றன.
எப்ராயிம் என்பவர் கி.பி. 306-373 காலத்தில் வாழ்ந்த சிரியாவின் மிகச் சிறந்த கிறிஸ்தவ கவிஞர் ஆவார். நிசிபிஸ் நகரில் பிறந்த இவர், முதலில் நிசிபிஸ் பிஷப் யாகோபின் மாணவராக இருந்தார். பின்னர் பெர்சியர்கள் அந்த நகரத்தைக் கைப்பற்றியபோது, அவர் எதெஸ்ஸாவுக்கு இடம்பெயர்ந்து அங்கே 373 ஆம் ஆண்டு மரித்தார்.
"பரிசுத்த ஆவியானவரின் யாழ்"
எப்ராயிம் "பரிசுத்த ஆவியானவரின் யாழ்" என்று அழைக்கப்படுகிறார், ஏனெனில் அவர் நூற்றுக்கணக்கான பாடல்கள், கவிதைகள் மற்றும் வேதாகம விளக்கங்களை எழுதினார், அவை ஆழ்ந்த இறையியல் கவிதை நயத்துடன் இணைத்தன. இந்த நான்காம் நூற்றாண்டின் அருளாளர் எழுதிய 400க்கும் மேற்பட்ட பாடல்கள் இன்றும் இருக்கின்றன.
இன்றைய பதிவில் அவர் எழுதிய பாடல்களும் அதன் விளக்கங்களையும் காணலாம். மூன்றாம் நூற்றாண்டு பாடல்களில் தோமாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவை காணும்போது, தோமாவின் இந்திய மிசனரி பயணம் உண்மை எனபது புலனாகிறது.
எப்ராயிமின் பாடல்கள்
- இந்திய மண்ணில் நான் வீழ்த்தியதாக எண்ணிய அப்போஸ்தலர், இதோ, எதெஸ்ஸாவில் என் விழிகளுக்கு விருந்தளிக்கிறார்; அவர் அங்கும் முழுமையாய், இங்கும் நிறைவாய் இருக்கிறார்...
விளக்கம்:
விசுவாசத்தினாலே ஆபேல் மரித்தும் பேசுகிறதுபோல (எபிரெயர் 11:4), அப்போஸ்தலர் தோமாவின் சாட்சியும் அவர் மரித்த பின்பும் எதெஸ்ஸா வரை ஒலித்தது.
- "வணிகர்கள் சுமந்து வந்தது வெறும் எலும்புகளை மட்டுமா? இல்லை, அந்த அப்போஸ்தலனயே அவர்கள் தோளில் ஏந்தி வந்தனரோ?...
விளக்கம்:
இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்., (2 கொரிந்தியர் 4:7) அப்போஸ்தலரின் எலும்புகள் தேவ வல்லமையின் சாட்சியாய் இருந்தது. அவர்கள் உடலோ, எலும்புகளோ புனிதமானது என்று எதையுமே நாமே உயர்த்திப் போற்றவேண்டியதில்லை உடல்கள் வெறும் மண்பாண்டங்கள் தான். கர்த்தர் அவர்களை எவ்வாறு தம்முடைய கருவிகளாக பயன்படுத்தினார், மற்றும் அவர்கள் எப்படி அவருக்காக முழுமையாக வாழ்ந்தார்கள், மரித்தார்கள் என்பதைக் கற்றுக்கொள்வதே தேவனுடைய விருப்பம்
- அந்த வணிகன் பெரும் செல்வம் ஈட்டினான்; அவன் கொண்டு வந்த புதையலோ, என்னைப் பரம ஏழையாக்கிவிட்டது! ஆம், எதெஸ்ஸாவில் திறக்கப்பட்ட அவனது கருவூலம், இந்த மாநகரை அருளால் நிரப்பி, செழிக்கச் செய்துவிட்டது!.
விளக்கம்:
வெள்ளியைப்பார்க்கிலும் அதின் வியாபாரம் நல்லது; பொன்னைப்பார்க்கிலும் அதின் வரவு உத்தமமானது. முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது. (நீதிமொழிகள் 3:14-15) ஞானம் பொன்னையும் வெள்ளியையும் விட மேலானதாயிருக்கிறது; அது உலகத்தின் எந்தச் செல்வத்தையும் தாண்டும் பரம ஆசீர்வாதம் என்று வேதாகமம் சொல்கிறது. அதேபோல, அப்போஸ்தலர் தோமா கிறிஸ்து தனக்கு அளித்த ஞானத்தை மக்களுக்கு போதித்தார், எதெஸ்ஸா போன்ற நகரத்திற்கு கிடைத்த ஆவிக்குரிய ஐசுவரியம், உலக செல்வங்களோடு ஒப்பிட முடியாத வகையில் உயர்ந்தது
XI. தோமாவே ஆசீர்வதிக்கப்பட்டவன் நீ, உன் செயல்களில் இரட்டையாக உன் ஆவிக்குரிய வல்லமை உள்ளது: உன் வல்லமை ஒன்றல்ல, உன் பெயரும் ஒன்றல்ல.
விளக்கம்:
அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். மாற்கு 16:20. க தோமாவின் செயல்களில் தேவனுடைய வல்லமையும் இணைந்து வெளிப்பட்டது.
XIV. ஆசீர்வதிக்கப்பட்டவன் நீ, மகா ராஜா அனுப்பியவன், இந்தியாவை அவரது ஒரே பேறானவருக்கு நீ மணவாட்டியாக்க: பனியை விடவும் வெண்மையான இயேசுவின் போதனைகளால், அந்தக் இருண்ட மணவாட்டியை ஒளிபெறச் செய்தீர்...
விளக்கம்:
கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார்(எபேசியர் 5:25-27), தோமா இந்தியாவை கிறிஸ்துவின் மணவாட்டியாக்க சத்தியத்தால் பரிசுத்தப்படுத்தினார். நாமும் கிறிஸ்துவின் வருகையில் அவருடைய மானவாட்டியாக அவரை சந்திக்க தயாராக வேண்டும்.
XVII. மும்முறை ஆசீர்வதிக்கப்பட்ட நகரே, நீ வாழிய!
விலைமதிப்பில்லா ஒரு முத்தைப் பெற்றுக்கொண்டாயே!
இந்தியாவால் இதைவிடப் பெரியதொன்றை ஈந்திட இயலுமோ...
விளக்கம்:
தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான் (மத்தேயு 13:46), தோமாவின் வருகை இந்தியாவிற்கு விலை மதிப்பில்லா கிறிஸ்துவின் முத்துப்போன்ற சுவிஷேசங்களைக் கொண்டு வந்தது. இது எதெஸ்ஸாவுக்கு கிடைத்த கிறிஸ்துவின்ஆசீர்வாதமாய் இருந்தது.
- ஒரே பேறானவர் தனது அப்போஸ்தலர்களைத் தெரிந்தெடுத்தார், அவர்களில் தோமாவையும் இந்தியாவிற்கு அனுப்பினார் இயேசுவை அறியாமல் இருளில் மூழ்கியிருந்த மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க. காரிருள் எனும் போர்வை இந்தியாவைச் சூழ்ந்திருந்த வேளையில், கதிரவன் கீற்றென தோமாவை இயேசு கிறிஸ்து அனுப்பினார்: அங்கே அவர் உதித்து, அந்த தேசத்திற்கே ஒளியூட்டினார்.
விளக்கம்:
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, தோமா இருளில் இருந்த இந்திய தேசத்திற்கு ஒளியாய் அனுப்பப்பட்டார். (மத்தேயு 28:19)
V. தோமாவின் பெருமையைப் பாட புகழுரைகள் தேவையில்லை; அவர் கிறிஸ்த்துவுக்காக சிந்திய இரத்த சாட்சியமே போதுமானது. இதோ, அவரின் எலும்புகள், அவர் பட்ட பாடுகள், அவர் ஆற்றிய செயல்கள் யாவும் முழங்குகின்றன; அவரின் அற்புதங்கள், அவர் இன்றும் உயிருள்ள சாட்சியாக இருக்கின்றது. அவரின் வீரச் செயல்கள் கடின மனம் கொண்ட இந்தியரையும் நம்ப வைத்தனவே! அவர் தம் நினைவுச்சின்னங்களின் உண்மையை எவரேனும் ஐயுறத் துணிவரோ?
விளக்கம்:
நல்ல போராட்டத்தைப் போராடினேன், என் ஓட்டத்தை முடித்தேன்' (2 தீமோத்தேயு 4:7) என்று பவுல் சொன்னது போல, தோமாவின் இரத்த சாட்சி மரணமும் அவர் ஆதாயப் படுத்தின ஆத்துமாக்களும் அவர் கிறிஸ்துவுக்கான ஓடின நல்ல ஓட்டத்தைக் காண்பிக்கிறது.
தேவனுக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக !!!
தொடர்ந்து பயணிப்போம்....
படைத்தவரின் பாதையில்,
திருமதி. ரெமினா சுஜித்
குறிப்பு
Ephraim’s hymns ‘On Thomas the Apostle’ testify to the tradition of St. Thomas’s mission in India. — A. E. Medlycott, India and the Apostle Thomas, pp. 268f, 291f.
கூடுதல் தகவல்கள்:
எப்ராயிம் கி.பி. 306-373 காலத்தில் வாழ்ந்தார், நிசிபிஸில் பிறந்து எதெஸ்ஸாவில் மரித்தார் Ephrem the Syrian: Hymns (Classics of Western Spirituality (Paperback)): Ephrem the Syrian, Kathleen E. McVey, John Meyendorff: 9780809130931: Amazon.com: Books +2
அவர் "பரிசுத்த ஆவியானவரின் யாழ்" என்று அழைக்கப்படுகிறார் St. Ephrem the Syrian: The Harp of the Holy Spirit--Aleteia +2
அவர் எழுதிய 400க்கும் மேற்பட்ட பாடல்கள் இன்றும் இருக்கின்றன St. Ephrem the Syrian (Deacon and Doctor)
