என் அருமை லூசி,

தெற்கே நீங்க பயணம் செய்யும்போது, முதல்ல கடற்கரை ஓரமா போவீங்க. இரவு நேரத்துல நிலா ஒளி கடல் மேல பட்டு மின்னும் காட்சியும், அருகிலுள்ள அலைகள்ல வெள்ளி ஒளி படர்ந்திருக்கும் அழகும் உங்க கண்ணுக்கு விருந்தா இருக்கும். தவளைகளோட கத்துற சத்தத்துக்கு பதிலா, கடல் அலைகள் கரையில மோதி உண்டாக்கும் இனிமையான ஓசை கேட்கும். மகிழ்ச்சி ததும்பும் மனசோட நீங்க "ஆண்டவரே! உம்முடைய படைப்புகள் எத்தனை அற்புதமானவை! பூமியும் பெரிய கடலும் உம்முடைய செல்வங்களால் நிறைந்திருக்கிறதே!" னு சொல்ல தோணும்.

சில நேரங்கள்ல, பல்லக்கு தூக்குறவங்க தங்களை குளிர்விக்க ஆழமான தண்ணீருக்குள்ளயும் ஓடுவாங்க. இரண்டு பக்கமும் கடல் சூழ்ந்திருக்கும்போது பயமா கூட இருக்கும். வேற யாரோட கூட இருந்தா மட்டும்தான் பயப்படுவீங்க ஆனா இவங்க கூட பல்லகுல இருக்கும்போது பயப்படமாடிங்க. இந்த நாட்டு மக்கள்கிட்ட எவ்வளவு நம்பிக்கை வைக்கறோம்னே ஆச்சர்யமா இருக்கும் - அவங்களோட திறமையிலயும், நேர்மையிலயும் கூட.

ஆண்டவரோட கிருபையால, இந்த மக்கள் மேல ஐரோப்பியர்களுக்கு இருக்கும் தாக்கம் பெரிசு. நீங்க மெட்ராஸ் (Madras) லேருந்து கன்னியாகுமரி (Cape Comorin) வரை தனியா கூட பயணம் செய்யலாம். பல சமயம் 30-40 மைல்கள் வரை எந்த ஐரோப்பியரும் இல்லாத இடத்துல இருப்பீங்க. ஆனாலும் உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது.

ஆனா என்ன பாருங்க! நம்ம கருணை மிக்க ஆண்டவர் இயற்கையின் அழகெல்லாம் கொட்டி வச்சிருந்தாலும், நீங்க போற வழி நெடுக விக்கிரக வழிபாட்டோட அடையாளங்கள்தான் உங்க மனசை வருத்தப்படுத்தும்.

ஒரு பக்கம் அழகான மரத்தோட அடியில, தட்டையான கல்லு மேல ரெண்டு பாம்புகள் பின்னிக்கிட்டு இருக்கும். அதுக்கு பக்கத்துல ஒரு சுவாமி சிலையும், அதுக்கு முன்னாடி யாராவது ஒரு ஏழை கும்புட்டுக்கிட்டு இருப்பாங்க.

இன்னொரு பக்கம் மரங்களுக்கு கீழே மண்ணால செஞ்ச குதிரை சிலைகள் உங்க கவனத்தை ஈர்க்கும். வித்தியாசமான தோற்றம் கொண்ட இந்த குதிரைகள் பல அளவுல இருக்கும் - சில பெரிசு, சில சின்னதா. எல்லாமே ஒரே மாதிரி குட்டையான கழுத்தோடவும், அலங்காரங்களோடவும் இருக்கும். சில குதிரைகள் மேல சவாரி செய்யறவங்களும் இருப்பாங்க, அது ரொம்ப அபூர்வம்தான்.

வெள்ளை அடிச்ச இந்த குதிரைகள் 20-30 வரை ஒரே இடத்துல இருக்கும். சில நேரம் வரிசையா, சில நேரம் சதுர வடிவத்துல நடுசுல பார்த்தபடி நிக்கும். புதுசா வச்சது மாதிரி தெரியற சிலைகளும் இருக்கும், உடைஞ்சு புல்லுக்குள்ள புதைஞ்ச பழைய சிலைகளும் இருக்கும்.

தஞ்சாவூர் (Tanjore) பகுதில இந்த குதிரை சிலைகள் நிறைய இருக்கும். ஏதோ நல்லது நடந்தப்போ வச்ச காணிக்கை மாதிரி தெரியுது. தஞ்சை ராஜா மராட்டிய வம்சத்தைச் சேர்ந்தவர்னு தெரியும்ல, அதனால இது சிவபெருமானோட அவதாரமான தெய்வத்தோட சிலையா இருக்கலாம். மராட்டியர்கள் அந்த தெய்வத்த குதிரை மேல ஏறி ஆயுதம் தாங்கியவரா வழிபடுவாங்க.

பரங்கிப்பேட்டை (Porto Novo) வயயும் தாண்டி போவீங்க. அங்கதான் இந்தியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை அண்மையில ஆரம்பிச்சிருக்காங்க. சேலம் (Salem)லிருந்து இரும்பு தாது கொண்டு வராங்க. ஸ்வீடன் (Sweden) நாட்டு சுரங்கத்த விட நல்ல தரம்னு சொல்றாங்க...

பரங்கிப்பேட்டயிக்கு (Porto Novo) அப்புறம் கொள்ளிடம் (Coleroon) ஆத்துக்கு வருவீங்க. உங்க பயணத்தோட மத்த விவரங்களை நான் விட்டுடுறேன். ஆனா வழியில தெரியற உயரமான கோபுரங்களை மட்டும் கவனிச்சுக்கோங்க. மயிலாடுதுறை (Mayaveram) கோபுரம் தெரியற வரைக்கும். ஊரு முழுக்க மரங்கள்ல மூடி இருக்கறதால, கிட்ட போனதுக்கு அப்புறம்தான் ஊரே தெரியும்.

காவிரி (Câvery) ஆத்து கரைக்கு இறங்கும்போது கோபுரமே மறைஞ்சுடும். இந்த பெருமைமிக்க ஆத்தைப் பத்தி கொஞ்சம் விரிவா சொல்லணும்.

காவிரி மேற்கு தொடர்ச்சி மலையில (Ghauts) துவங்குது. தெற்க இந்தியாவை கிழக்கு-மேற்கா பிரிக்கிற மலைத்தொடர் அது. மைசூர் (Mysore) வழியா 300 மைல் ஓடி, சீரங்கப்பட்டினம் (Seringapatam)ல தான் அதோட அழகும் பயனும் முதல்ல தெரியுது. இரும்பு நிற பாறைகளுக்கு மேல வேகமா பாயுது. கோட்டையையும் தீவையும் சுத்தி ஓடுது. லார்டு ஹாரிஸ் (Lord Harris) அவர்களோட வீரமும் திறமையும்தான் திப்பு சுல்தான் (Tippoo Saib) கோட்டை மேல ஆங்கில கொடியை ஏத்த உதவுச்சு.

ஆண்டவர் நம்மை இந்த நாட்டுல எப்படியெல்லாம் நடத்தி இருக்காரு பாருங்க! இவ்வளவு பெரிய வெற்றிகளையும், பரந்த நாட்டையும் ஏன் நமக்கு தந்தாருன்னு யோசிக்க வேண்டியிருக்கு.

இந்த பெருமையான ஆறு பல நூறு மைல்கள் தூரம் பயணிக்குது. ஆங்கிலேயர் வீரம் காட்டின பல இடங்கள் வழியா போகுது. சமவெளிகளோட அழகான காட்சிகள் வழியா வளைஞ்சு, 300 அடி உயரத்துலேருந்து விழுந்து பாயுது. பெரும்பாலான இடங்கள்ல ஒரு மைல் அகலம் இருக்கும். ஆனா அதோட தண்ணி முழுக்க கடலை சேர்றது இல்லை...

இரண்டு பக்கமும் எண்ணற்ற கால்வாய்கள் வழியா தண்ணி பிரிஞ்சு போயிடுது. அந்த கால்வாய்கள்ல இருந்து இன்னும் சின்ன சின்ன கால்வாய்கள் பிரிஞ்சு தூரமான இடங்களுக்கெல்லாம் தண்ணீரை கொண்டு போகுது.

காவிரி ஆறு, இந்த கரையோர பகுதியில உள்ள மத்த ஆறுகள் மாதிரியே அக்டோபர் மாசத்து பருவ மழையால பாதிக்கப்படுது. அப்போ பெய்யற கனமழை ஆத்து வெள்ளத்தை பெருக்கெடுக்க வச்சு, வளத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருது. மக்கள் அவசர அவசரமா தங்கள் நெல் வயல்களுக்கு சின்ன கால்வாய்கள் வழியா தண்ணீரை திருப்பி விடுவாங்க. நிலம் சேறா ஆனதும், எளிமையா உழுது, விதை விதைச்சு, நெல் வளர்றதுக்கு ஏத்த அளவு தண்ணீர் பாய்ச்சுவாங்க. பிப்ரவரி மாசத்துல அறுவடை பண்ணிட்டு, அடுத்த சில மாசங்களுக்கு நிலத்தை தரிசா விட்டுடுவாங்க.

ஆனா தஞ்சாவூருக்கும் (Tanjore) காவிரி பாயற மத்த பகுதிகளுக்கும் இன்னொரு அறுவடை காத்துக்கிட்டு இருக்கு. வசந்த காலத்துல மலபார் கரையோர பருவமழை துவங்கும். மேற்கத்திய காத்து மேக கூட்டங்களை காவிரி துவங்குற மலைப்பகுதி மேல தள்ளும். அந்த மேகங்கள் மலை உச்சிய சுத்தி மூடி, மெல்ல மெல்ல "மலைகளுக்குள்ள ஓடற" சின்ன ஓடைகளுக்கு தண்ணீர் கொடுக்கும். இந்த ஓடைகள் எல்லாம் முக்கிய ஆத்தோட சேர்ந்து, ரெண்டாவது தடவையா ஆத்து வெள்ளத்தை பெருக்கெடுக்கும்.

மறுபடியும் வளம் தரக்கூடிய தண்ணி பாயுது, மறுபடியும் விதை விதைக்கப்படுது, மறுபடியும் தண்ணீர் பாய்ச்சப்படுது. அக்டோபர் வர்றதுக்கு முன்னாடியே, ஆண்டவர் "வருஷத்தை தன்னோட நன்மையால முடிசூட்டி" இருப்பார். ரெண்டாவது முறையா "பள்ளத்தாக்குகள் தானியத்தால மூடப்பட்டு, மகிழ்ச்சியோட கூவி ஆடி பாடும்."

காவிரி அருவிகளைப் பத்தி (Falls of the Câvery) ஒரு எழுத்தாளர் சொல்லியிருக்காரு, கேளுங்க:

"இந்த பெரிய ஆத்தோட விழுகை ஓசை மிகவும் மகிழ்ச்சியான அறிவிப்பு. ஜூன் மாசத்துல வெயிலும் வறட்சியும் தாக்கும் சமவெளிப் பகுதிக்கு இது பெரிய வரப்பிரசாதம். எந்த முன்னறிவிப்பும் இல்லாம, பகலில வெயில் கொளுத்தும் நேரத்துலயோ அல்லது இரவோட அமைதியிலயோ, இந்த தண்ணீர் வளத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்து சேர்க்குது.

பருவ மழை தாமதமா வந்து, மக்கள் சோர்ந்து போய் கண்கள் குழிஞ்சு நிக்கும்போதும், சரியான நேரத்துல வந்து மக்களோட முகத்துல சந்தோஷத்தை கொண்டு வரும்போதும் பார்த்தவங்களுக்கு தான் இதோட மதிப்பு புரியும். எல்லாருமே கொண்டாட்டத்துல இருப்பாங்க. ஆம்பளைங்க, பொம்பளைங்க, குழந்தைங்க, மாடு நாய்கள், ஆடு மந்தைகள், பறவைகள்னு எல்லாமே கரைக்கு ஓடி வரும்..."

104வது சங்கீதத்துல சொன்னது போல "காட்டு மிருகங்கள் தாகம் தீர்த்துக்கிறதும்", "வானத்து பறவைகள்" கரையோர மரங்களின் புத்தம் புது இலைகளுக்கு மத்தியில பாடறதும் எவ்வளவு பொருத்தமா இருக்கு பாருங்க!

நீங்க கடக்கப்போற இடத்துல ஆத்து காட்சி ரொம்ப அழகா இருக்கும். கரையோரம் மரங்களுக்கு நடுவுல மடங்கள் மாதிரி சத்திரங்கள் இருக்கும். ஒவ்வொன்னுக்கும் பக்கத்துல கல் படிகள் இருக்கும். புண்ணிய நதியில பாவங்களை கழுவிக்க வர்ற யாத்ரீகர்களுக்காக இது.

கரையில இறங்கி, பல்லக்கு தூக்குறவங்க ஆத்தை கடந்து, எதிர் கரைக்கு ஏத்தறதுல எந்த சிரமமும் படமாட்டாங்க. சில நிமிஷங்கள்ல மயிலாடுதுறை (Mayaveram) வந்துடும்.

இது 10,000 பேர் வாழற பெரிய ஊரு. சுத்துப்பட்ட கிராமங்கள்ல நிறைய இந்து மக்கள் வாழறாங்க. பிஷப் ஹீபர் (Bishop Heber) சொன்னது போல இது "பிராமணத்தின் அருள்பெற்ற பூமி". பல கிராமங்கள் புனிதமானதா கருதப்படுது. அவற்றோட பெயர்களுக்கு முன்னாடி 'திரு' அல்லது 'ஶ்ரீ'ன்னு சேர்த்து சொல்வாங்க.

மாவட்ட சப்-கலெக்டரைத் தவிர, கும்பகோணம்ல (Combaconum) 22 மைல் தூரத்துல தான் அடுத்த ஐரோப்பியர்கள் இருக்காங்க. இங்க இருக்கற மிஷனரி, பயணமா யாராவது வந்தா மட்டும்தான் தன் சொந்த நாட்டு மக்களை பார்க்க முடியும்.

ஊருக்குள்ள நுழையும்போது, நல்ல தெருவழியா போவீங்க. வீடுகளுக்கு இடையில சின்ன சின்ன தோட்டங்கள் இருக்கும். அப்படியே தஞ்சாவூர் (Tanjore) போகற பெரிய சாலைக்கு வருவீங்க. வலது பக்கம் திரும்பி, ஒரு பக்கம் சின்ன சுவாமி கோவிலையும், இன்னொரு பக்கம் மரங்களுக்கு கீழ அந்த மர்மமான குதிரை சிலைகளையும் தாண்டினா, மிஷன் வளாகத்துக்குள்ள போற கேட்டு வரும்.

இங்க வீட்டோட பக்கத்துல இருக்கற சின்ன புல் தரையில இரண்டு விஷயங்களை உங்ககிட்ட சொல்லணும் - ஒன்னு ஒன்றரை அல்லது ரெண்டு அடி உயரம் இருக்கற சின்ன கல் விக்கிரகம். இது ஏதோ கைவிடப்பட்ட கோயில்லேருந்து எடுத்து வந்தது. அதுக்கு பக்கத்துலயே 12-15 அடி நீளம் இருக்கற திமிங்கலத்தோட பெரிய எலும்பு. திரு. பேரன்புரக் (Mr. Barenbruck) அவர்கள் அவரை பார்க்க வர்ற இந்துக்கள்கிட்ட பேசும்போது இதை பயன்படுத்துவார். இந்த சின்ன கல்லு தான் இந்த அற்புதமான விந்தையான எலும்பை உருவாக்கி இருக்குமான்னு கேப்பார்.

இப்போதைக்கு இத்தோட முடிசிக்கிரேன்.

அன்புடன்,

சாராள் டக்கர்