முந்தைய அத்தியாயங்களில்,அக்டோபர் முதல் ஐந்து நாட்களில், மிஷனரி கெரிக்கே தென்தமிழக கிராமங்களுக்குப் பயணம் செய்து, கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட நூற்றுக்கணக்கான மக்களுக்குப் போதித்தார். நடுவகுறிச்சி (Naduvakurichi), பெத்லகேம் (Bethlehem), நாவலடி (Navaladi), குண்டல் (Kundal), மற்றும் காரிகோவில் (Karikóvil) போன்ற இடங்களில், மக்கள் தங்கள் பழைய பெயர்களை விடுத்து, புதிய கிறிஸ்தவப் பெயர்களுடன் குடும்பம் குடும்பமாக ஞானஸ்நானம் பெற்றனர். பல கிராமங்களில், மக்கள் தங்கள் சிலை கோவில்களையே சுத்தம் செய்து, அவற்றை கிறிஸ்தவ ஜெப ஆலயங்களாக மாற்றியிருந்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் புதிதாக ஞானஸ்நானம் பெற்ற விசுவாசிகளை வழிநடத்த மூப்பர்கள் நியமிக்கப்பட்டனர். உவரி (Uvari) கிராமத்தில் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், மக்கள் கிறிஸ்துவை அறியும் ஆர்வம் தொடர்ந்து பரவி, இது ஒரு புதிய ஆவிக்குரிய விழிப்புணர்வின் காலமாகப் பார்க்கப்பட்டது. இதனுடைய தொடர்ச்சியை இந்த மாதத்தில் காண்போம்…
6ம் தேதி
கெரிக்கே (Gericke) தருவை (Taruvai) என்ற இடத்திற்குச் சென்றார், அங்கு கிறிஸ்துவின் போதனைகளை கேட்பதற்காக முதலூர் (Mudalur) செல்லப்போகும் பல உபதேச கேட்பவர்கள் இருந்தனர். அவர் அங்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் தங்கினார், பின்னர் படுக்கபட்டு (Padukkapattu) என்ற இடத்திற்குச் சென்றார். அங்கு கிராமத்தின் தலைவர் கிராம மக்கள் தன்னுடன் வரும்போது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற விரும்பினார், அதன் பின்னர் மாலையில் மனப்பாடு (Manappad) சென்றார்.
அங்குள்ள சபையாரை கண்டார், ஆனால் "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த விவேகமும் உண்மையுமுள்ள உபதேசியார் (Catechist) அடைக்கலம் (Adaikalam) அவர்கள் உபதேசியாரக இருந்தபோது இருந்ததைவிட முழுமையாக திருப்திகரமான நிலையில் இல்லை" என்று கண்டார். அடுத்த நாள் சத்தியநாதன் (Sattiyanadan) மற்றும் உபதேசியார்கள் (Catechists) படுக்கபட்டிலிருந்து (Padukkapattu) அவரைப் பின்தொடர்ந்து வந்தனர், பதினைந்து பேர் தலைவரைப் பின்பற்ற தீர்மானித்து, கிறிஸ்தவ உபதேசங்களைக் கற்றுக்கொள்வதர்க்காக முதலூருக்கு (Mudalur) செல்ல தயாராக இருப்பதாகவும், தங்கள் பெயர்களை எழுதிவைக்க கேட்டதாகவும் செய்தி கொண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் வெள்ளாளர் (Vellalar) என்ற மக்கள் கூட்டத்தை சேர்ந்தவர்கள்.
மணப்பாட்டில் (Manappad) அப்போது சபையார் எண்ணிக்கை 115 ஆக இருந்தது. 1800ல் இது அதிகமாக இருந்தது, ஆனால் பலர் அதன்பிறகு சிலோனுக்கு (Ceylon) சென்றுவிட்டனர், அங்கு நெசவுத் தொழிலின் முக்கியத்துவம் அதிகரித்தாதல் அங்கு நெசவு தொழில் தொடங்க நெசவாளர்களுக்கு தேவை இருந்தது. அடுத்த நாள் கெரிக்கே (Gericke) மணப்பாட்டில் (Manappad) உள்ள டச்சு (Dutch) தேவாலயத்தில் சென்று அங்குள்ள இரண்டு டச்சு (Dutch) குடும்பங்களுக்காகவும் தமிழர்களுக்காகவும் ஆராதனைகளை நடத்தினார், மேலும் மாலையில் திருச்செந்தூர் (Trichendur) வந்தார்.
அங்கு அவர் "மறவர் நாட்டின்" அதாவது ராமநாடு (Ramnad) கலெக்டரை சந்தித்தார், அவரின் மொழிபெயர்ப்பாளரும் எழுத்தரும் வில்லியம் வீட்லி (William Wheatley) ஆவார், இவர் ராமநாடு (Ramnad) பாடசாலை ஆசிரியரின் தத்தெடுக்கப்பட்ட மகன். அவர் சத்தியநாதனை (Sattiyanadan) கலெக்டரிடம் அறிமுகப்படுத்தினார், மேலும் உவரியில் (Uvari) கிறிஸ்தவர்கள் அனுபவித்த துன்பங்களைப் பற்றி அவரிடம் பேசினார். அவர் "லாலு சாஹிப்" (Lalu Sahib) என்ற வாரணாசியிலிருந்து (Benares) வந்த இந்துவுடனும் பேசினார், இவர் கலெக்டரின் கீழ் உப-மாவட்டத்தின் பொறுப்பில் இருந்தார், மேலும் கிறிஸ்தவர்களிடம் நட்புடன் நடந்துகொள்ளுமாறு அவரைக் கேட்டுக்கொண்டார். அவரும் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொண்டார். 14ம் தேதி மாலையில் கெரிக்கே (Gericke) திருச்செந்தூரை (Trichendur) விட்டு பல்லிபட்டுக்கு (Pallipattu) பயணித்தார்.
மேலும் எழுதுகிறார்:
15ம் தேதி
பல்லிபட்டு (Pallipattu) என்ற இடத்தில், மிஷனரி ஒரு புதிய கிறிஸ்தவ கிராமத்தையும், ஒரு தேவாலயத்தையும் கட்டுவதற்காக நிலம் வாங்கினார். சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த நாற்பத்தெட்டு பேர் கொண்ட பதின்மூன்று குடும்பங்கள், சில மாதங்களாக கிறிஸ்தவ போதனைகளைக் கற்றுக்கொள்வதற்காக முதலூருக்கு (Mudalur) சென்று வந்தனர். அந்த நிலத்தில் தேவாலயம் கட்டப்படவிருந்த இடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு பந்தலின் கீழ், அவர்கள் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றனர்
இந்த கிறிஸ்தவ குடியிருப்பு ஜெருசலேம் (Jerusalem) என்று பெயரிடப்பட்டது. கெரிக்கே (Gericke) அவர்களுக்கு ஒரு உபதேசியாரையும் (Catechist), அந்த இடத்தின் இந்து பாடசாலை ஆசிரியரின் நபரில் ஒரு பாடசாலை ஆசிரியரையும் கண்டார், இவர் ஞானஸ்நானம் பெற்றவர்களில் ஒருவர். கெரிக்கே (Gericke) பின்னர் தூத்துக்குடி (Tuticorin) சென்றார், அங்கு ஒரு நாள் தங்கி, பின்னர் வடக்கு நோக்கி பயணித்து, அக்டோபர் 20ம் தேதி ராமநாட்டை (Ramnad) அடைந்து 24ம் தேதி அங்கிருந்து புறப்பட்டார். ராமநாட்டில் (Ramnad) அவரது ஆலய ஆராதனையில் ஆறு ஆங்கிலேய நற்கருணை பெறுபவர்களும் பதினைந்து தமிழர்களும் இருந்தனர், அவர்களில் ஆறு பேர் புதிதாக திடப்படுத்தல் பெற்றவர்கள் ஆவர்.
கெரிக்கேயின் (Gericke) கணக்கிலிருந்தும், கால்ட்வெல் (Caldwell) நகலெடுத்த ஞானஸ்நானப் பட்டியல்களில் கொடுக்கப்பட்ட விரிவான எண்ணிக்கையிலிருந்தும் தெரிவது என்னவென்றால், அக்டோபர் 1 மற்றும் 6 ஆகிய தேதிகளுக்கு இடையில் அவர் ஐந்து கிராமங்களில் - நடுவகுறிச்சி (Naduvakurichi) (அல்லது பெத்லகேம் Bethlehem), நவலாடி (Navaladi), குண்டல் (Kundal), காரிகோவில் (Karikóvil), மற்றும் உவரி (Uvari) - 977 பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். அவர் புறப்பட்ட பிறகு, உபதேசியார் சத்தியநாதன் (Sattiyanadan) இந்த வேலையைத் தொடர்ந்தார், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தென் திருநெல்வேலியில் (South Tinnevelly) மேலும் 3057 பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார், இவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் சானார்கள் மக்கள் கூட்டத்தை (Shanars) சார்ந்தவர்கள் ஆவர்.
இவர்களில் நவலாடியில் (Navaladi) (934), இடையங்குடியில் (Idaiyngudi) (311), அன்னிகுடியில் (Annigudi) (249), லட்சுமிபுரத்தில் (Lakshmipuram) (168), மற்றும் அவுடையாபுரத்தில் (Avudaiyapuram) (157) ஏறக்குறைய 150க்கு மேற்பட்ட குழுக்கள் அடங்கியிருந்தனர். ஞானஸ்நானங்களின் வேகமான ஓட்டம் பின்னர் முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது, இருப்பினும், நாம் பார்ப்பது போல், அடுத்த மூன்று ஆண்டுகளில் கணிசமான சேர்க்கைகள் தொடர்ந்தன.
துன்புறுத்தல்கள்
மிகப் பெரிய அளவில் கர்த்தர் மாற்றத்தை கொண்டுவந்தார். ஆனால் மாற்றத்திற்கு பின் கிறிஸ்தவர்களுக்கு எதிராக உடனடியாக எழுந்த துன்புறுத்தல்கள் கணிசமானவை, மேலும் இதன் வேகம் குறைவதற்கு பங்களித்திருக்கலாம். இந்து தலைவர்கள் அவர்களை பல்வேறு வழிகளில் துன்புறுத்தியது மட்டுமல்லாமல், இந்துக்களாக இருந்த கீழ்நிலை அதிகாரிகள் கிறிஸ்தவர்களிடம் அங்கீகரிக்கப்படாத வரிகளை விதித்தனர், மேலும் அவர்களுக்கு எதிராக கலெக்டரிடம் புகார்கள் செய்தனர். இப்படிப்பட்ட பிரச்சனைகள் 1802 செப்டம்பர்/அக்டோபரில் கெரிக்கேயின் (Gericke) திருநெல்வேலி (Tinnevelly) விஜயத்திற்கு முன்பே தொடங்கின, மேலும் உபதேசியார் தாவீதின் (David) செயலால் விஷயங்கள் மோசமாகின, அவர் கிளப்-மேன் (club-men) என்று அழைக்கப்படும் ஒரு குழுவின் தலைவராக தன்னை வைத்துக்கொண்டு, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றவர்களின் அநீதிகளை பலவந்தமாக சரிசெய்ய முயற்சித்து இடமிடமாகச் சென்றனர்.
மதராஸுக்கு (Madras) திரும்பிய சிறிது நேரத்திற்குப் பிறகு, கெரிக்கே (Gericke) நவம்பர் 23ம் தேதி திரு. லுஷிங்டனுக்கு (Mr. Lushington), திருநெல்வேலி (Tinnevelly) கலெக்டருக்கு, "பல மாதங்களுக்கு முன்பு" முதலூர் (Mudalur) மற்றும் மணப்பாடு (Manappad) கிறிஸ்தவர்களிடமிருந்து பெற்ற ஒரு மனுவை இணைத்து கடிதம் எழுதினார்:
"...மனுவில் சொல்லப்பட்டுள்ள செட்டியார் மக்கள் குழுவினர், ஏழை மக்களிடமிருந்து சட்டத்திற்குப் புறம்பாக அதிக வரி வசூலிப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது என்ற எந்தவிதமான உத்தரவாதத்தையும் அந்த ஏழை மக்களுக்குக் கொடுக்காமல், முன்பு வசூலித்ததை விட இப்போது அதிகமாகப் பணம் பறிக்கிறார்கள். முதலூரில் (Mudalur) உள்ள கிறிஸ்தவர்கள், அந்தப் பகுதி தஞ்சாவூர் (Tanjore) மிஷனரிகளுக்கு மாற்றப்பட்டபோது செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி செலுத்த வேண்டிய வரியைச் சரியாகச் செலுத்தி வந்துள்ளனர். ஆனால், இப்போது அவர்களிடம் கூடுதலாக ஒரு புதிய வரி கேட்கப்படுகிறது. இந்த 'செட்டிகள்' தங்களின் அடக்குமுறையை இன்னும் அதிகப்படுத்துவார்களோ என்று ஏழை மக்கள் அஞ்சுகிறார்கள். தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காததால், போரினால் ஏற்பட்ட பாதிப்பை விட இவர்களால் தாங்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகவே, இந்தப் புகாரை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்..." என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
டிசம்பர் 4ஆம் தேதி திரு. லுஷிங்டன் (Mr. Lushington) அனுப்பிய கடிதத்தில் இந்த விவரங்கள் இருந்தன. அந்தக் கடிதத்துடன், ஒரு தாசில்தாரின் (Tahsildar) புகாரையும் அவர் இணைத்திருந்தார். அதில், சத்தியநாதன் (Sattiyanadan) என்பவர் மறவர் (Maravars) மக்கள் கூட்டத்தை திருச்சபையில் சேர்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தார். "ஏனெனில், மறவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பை, சதி செய்வதற்கும் அமைதியைக் குலைப்பதற்கும் பயன்படுத்தக்கூடும்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் குறிப்பிட்டதற்கான காரணம் ஏற்கனவே இது தொடர்பான பிரச்சனைகள் ஏற்ப்பட்டிருந்தது.
மேலும், அநீதியான குணம் கொண்ட மக்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும், புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட சாணார் (Shanars) மக்களின் உலகியல் சார்ந்த விஷயங்களில் தலையிட வேண்டாம் என்றும் சத்தியநாதனுக்கு அறிவுரை கூறுமாறு திரு. லுஷிங்டன், கெரிக்கேயிடம் (Gericke) கேட்டுக்கொண்டார்.
டிசம்பர் 15ஆம் தேதி, கெரிக்கே (Gericke) இந்தக் கடிதத்திற்குப் பதில் அனுப்பினார். அதில் அவர், தாசில்தார் (Tahsildar) கூறிய பல விஷயங்கள் உண்மையல்ல என்பது தனக்குத் தெரியும் என்று குறிப்பிட்டார். இருந்தாலும், உபதேசியார்களில் (Catechists) ஒருவர், "தனக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட்டதை" கண்டுபிடித்ததாக ஒப்புக்கொண்டார். அந்த உபதேசியாரை வேலையை விட்டு நீக்கியிருப்பேன், ஆனால் பல சபைகளுக்குப் போதகர்களும், பள்ளி ஆசிரியர்களும் குறைவாக இருப்பதால், அவரைத் தற்காலிகமாக மிஷனரி சேவையில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் கெரிக்கே கூறினார்.
கெரிக்கே (Gericke) இந்த கடிதத்தில் மறவர் மக்கள் கூட்டத்தினரை (Maravars) சபைகளில் சேர்த்துக்கொள்வது பற்றிய கேள்வியைக் குறிப்பிடவில்லை, ஆனால் டிசம்பர் 22ம் தேதி அவர் சத்தியநாதனுக்கு (Sattiyanadan) இவ்வாறு எழுதினார்:
"...உங்கள் கடிதங்களில் நீங்கள் கேட்டுக்கொண்டது போல் உடனடியாக திருநெல்வேலி (Tinnevelly) திரும்புவது எனக்கு சாத்தியமில்லை, இருப்பினும் அவ்வாறு செய்ய நான் மிகவும் ஆசைப்படுகிறேன். அதன்படி, திரு. கோலேஃப் (Mr. Kohlhoff) அதற்குப் பதிலாக வந்து எல்லா விஷயங்களையும் ஒழுங்கு செய்ய முயற்சிப்பார். மணியக்காரன் அடைக்கலம் (Maniyakaran Adaikalam) லாலா (Lala) மற்றும் அவரது மக்களிடமிருந்து இவ்வளவு துன்பம் அனுபவித்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன்; நானும் அவருடன் துன்பப்படுகிறேன் என்று அவருக்கு உறுதியளியுங்கள். அவர் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்பே உண்மையாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியதைச் செலுத்தியிருந்தபோதும் அவர்கள் அவரை இந்த வழியில் நடத்தியிருப்பது ஆச்சரியமாக வேதனையாகவும் உள்ளது. இதன் காரணமாக, அதைப் பற்றி முழுமையாக எனக்குத் தெரியப்படுத்தினால் நான் அதைப் பற்றி கலெக்டருக்கு எழுதுவேன்.
"மறவர்களைப் (Maravars) பற்றி உங்களுக்கு கலெக்டரின் கடிதத்தின்படி, நீங்கள் அவர்களை சபையில் சேர்த்துக்கொள்ளாதது கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய குருமார் அந்த மக்களுடன் நெருக்கமாக இருப்பது சரியல்ல என்று கலெக்டர் எனக்கு எழுதினார்; இது உண்மை. கர்த்தர் நல்லவர்களையும் கெட்டவர்களையும் அழைக்கிறார்; அவர் தனது வீட்டை கெட்டவர்களால் நிரப்புவதற்காக அல்ல, மாறாக கெட்டவர்களை நல்லவர்களாக ஆக்குவதற்காக. அந்த மறவர்கள் (Maravars) நல்லவர்களாக மாற விருப்பமுள்ளவர்களாக இருந்தால், அவர்கள் சரியான நேரத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்; இப்போது நீங்கள் அவர்களைப் பற்றி விசாரித்து அவர்களை சோதனையின் கீழ் வைக்க வாய்ப்பு உள்ளது.
"அரசாங்கத்துடன் தொடர்புடைய எந்த விஷயங்களிலும் நீங்களோ அல்லது உபதேசியார்களில் (Catechists) எவரோ தலையிடக்கூடாது என்பது கலெக்டரின் இரண்டாவது கடிதத்தின்படி விரும்பத்தக்கது. அரசாங்க அதிகாரிகள் நாம் அவ்வாறு செய்வதைக் கண்டால், அவர்கள் கோபப்படுவார்கள், மேலும் விவசாயிகளும் (ryots) கீழ்ப்படியாமைக்கு தூண்டப்படுவார்கள். எனினும், கிறிஸ்தவர்களாக மாறியதன் விளைவாக எந்த நபர்களும் அரசாங்க அதிகாரிகளால் அநீதியாக நடத்தப்பட்டால், போதுமான ஆதாரத்துடன் அதைப் பற்றிய தகவலை எனக்கு அனுப்புங்கள், பின்னர் அந்த விஷயத்தில் என்னால் முடிந்த உதவியை வழங்க முடியும்… என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டார்.
கோல்ஹாஃப் (Kohlhoff) வசந்த காலத்தில் திருநெல்வேலிக்குச் செல்ல உறுதியளித்திருந்தார். அதன்படி அங்கு சென்று, அங்குள்ள நிலவரம் குறித்த ஒரு கடிதத்தை S.P.C.K. அமைப்புக்கு மார்ச் 1805-ல் அனுப்பினார். அந்தக் கடிதத்தில், பாளையங்கோட்டை ஆட்சியர் (Collector at Palamcottah), கிறிஸ்தவர்களின் பிரதிநிதிகளிடம் காட்டிய பரிவுக்காகத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டது தொடர்பாக ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுகளையும் அவர் விவரிக்கிறார். ஆட்சியர், கிறிஸ்தவர்கள் மீதான துன்புறுத்தல் வழக்கை முழுமையாக விசாரித்ததாகவும், ஆனால் முதலூர் தேவாலயம் (Mudalur church) எரிக்கப்பட்டது தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள், அமர்வு நீதிமன்றத்தில் (Sessions) விசாரிக்கப்பட்டு, கசையடி மற்றும் ஏழு ஆண்டுகள் கடின உழைப்புடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டனர் என்றும் கூறியுள்ளார். ஆகஸ்ட் மாதம் தஞ்சாவூருக்குத் திரும்பிய பிறகு அவருக்குக் கிடைத்த கடைசி செய்தி இதுதான்.
அவரது கடிதத்தின் தொடர்ச்சி:
மேலும் கெரிக்கே எழுதுகிறார், "பாளையங்கோட்டையில் எனது வேலையை முடித்த பிறகு, திருநெல்வேலியில் உள்ள ஐந்து வெவ்வேறு கிராமங்களுக்குச் சென்றேன். அங்குள்ள சபைகளின் பெரும் பகுதி மக்கள் .கிறிஸ்தவத்தைதயும் கிறிஸ்துவையும் ஏற்றுக்கொண்டு , தங்கள் கிறிஸ்தவ உறுதிமொழிகளுக்கு உண்மையாக இருந்ததைக் கண்டேன். அவர்கள் சந்தித்த துன்புறுத்தல்களின் விளைவாக, மற்ற எல்லா சபைகளும் தங்கள் விசுவாசத்தில் உறுதியாக இருந்தன. சோதனைகள் மற்றும் துன்பங்களுக்கு மத்தியிலும், தங்களை ஆசீர்வதித்த மீட்பராகிய கிறிஸ்துவின் பெயரை அறிக்கையிடுவதில் அவர்கள் வெட்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் தங்கள் தொழிலில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் நான் அவர்களை வேண்டிக்கொண்டேன்..."
"பெரும்பாலான சபைகளில், மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்றனர். குறிப்பாக, அவர்கள் ஆராதனைக் கூட்டங்களில் ஆர்வத்துடன் கலந்துகொண்டது தெரிந்தது. அவர்கள் கிறிஸ்துவின் வார்த்தையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் ஆராதனைக்கு வருவதாகவும், தங்கள் பிள்ளைகளை வேதத்தையும் கிறிஸ்தவ போதனைகளை கற்பதற்காக அனுப்புவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். நான் என் பயணத்தின்போது, புதிதாகச் சபைக்கு வந்த 108 பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன். அவர்கள் கிறிஸ்தவக் கொள்கைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர். மேலும், 138 பேருக்கு திருவிருந்தும் வழங்கினேன்."
"என் பயணத்தைத் முடித்துத் திரும்பும்போது, நான் பாளையங்கோட்டைக்குச் சென்றேன். அங்கே, திரு. ஜேனிக்கே (Late Rev. Mr. Jaenicke) தங்கியிருந்த அதே இடத்தில் ஒரு சிறிய சபை இருப்பதைக் கண்டேன். அவர் கட்டிய புதிய தேவாலயத்தில் நான் பலமுறை பிரசங்கம் செய்தேன். தமிழ்ச் சபையைச் சேர்ந்த பதினான்கு பேருக்குப் பரிசுத்த திருவிருந்தும், ஒரு ஐரோப்பிய அதிகாரியின் குழந்தைக்கும் ஞானஸ்நானம் கொடுத்தேன்."
ஓயாது கிறிஸ்துவுக்காக உழைத்த கெரிக்கே (Gericke) அக்டோபர் 2, 1803 அன்று வேலூரில் காலமானார். எனவே, தஞ்சாவூரில் இருந்த தெற்கு சபைகள் மற்றும் தஞ்சாவூரில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆங்கிலேயப் படைப்பிரிவின் முழு மேற்பார்வைப் பொறுப்பும் கோல்ஹாஃப்பிடம் (Kohlhoff) ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், சத்தியநாதன் (Sattiyanadan) ஆகஸ்ட் 1805 வரை திருநெல்வேலிக்குச் செல்ல முடியவில்லை. அவர் திருநெல்வேலியில் நடந்த ஞானஸ்நானங்கள் குறித்த அறிக்கைகளைத் தவறாமல் கோல்ஹாஃப்பிற்கு அனுப்பினார்.
1803-ம் ஆண்டுக்கான ஞானஸ்நானப் பட்டியல் பின்வருமாறு:
திருநெல்வேலி திருச்சபையின் இந்த வரலாற்றுப் பகுதி, மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மேலான தேவனுடைய செயலின் தெளிவான சாட்சியாக விளங்குகிறது. வெறும் சில மாதங்களில் ஆயிரக்கணக்கான மக்கள், பல தலைமுறைகளாகப் பின்பற்றி வந்த நம்பிக்கைகளை விட்டு, கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்தது ஒரு மாபெரும் ஆவிக்குரிய எழுப்புதல் அன்றி வேறில்லை. தங்களின் கோவில்களையே ஜெப ஆலயங்களாக மாற்றியதும், குடும்பம் குடும்பமாக ஞானஸ்நானம் பெற்றதும், கர்த்தருடைய ஆவியானவர் மக்களின் இருதயங்களில் செய்த அற்புதத்தின் வெளிப்பாடாகும். இந்த மாபெரும் அறுவடையின் மையத்தில், கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட பாத்திரமாக மிஷனரி கெரிக்கே (Gericke) திகழ்கிறார். குறுகிய காலத்தில் கிராமம் கிராமமாகப் பயணம் செய்து, இரவும் பகலும் பாராமல் போதித்து, சபைகளை ஒழுங்கமைத்து, துன்புறுத்தப்பட்ட மக்களுக்காக அதிகாரிகளிடம் பேசி, தன் இறுதி மூச்சு வரை கிறிஸ்துவுக்காக வாழ்ந்த அவரது அர்ப்பணிப்பு அளப்பரியது. அவர் விதைத்த விதைகள், சத்தியநாதன் (Sattiyanadan) போன்ற உள்ளூர் உபதேசியார்களின் கரங்களால் பராமரிக்கப்பட்டு, மாபெரும் விருட்சமாக வளர்ந்தது. ஆனால், இந்த மாபெரும் அறுவடை பூக்களின் பாதையில் அமையவில்லை. அநீதியான வரிகள், பொய்க் குற்றச்சாட்டுகள், வன்முறை, சிறைவாசம், ஏன், முதலூர் தேவாலயம் எரிக்கப்பட்டது வரை, புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்கள் சொல்லொணாத் துன்பங்களைச் சந்தித்தனர். இருந்தபோதிலும், கோல்ஹாஃப் (Kohlhoff) கண்ட சாட்சியின்படி, அவர்கள் தங்கள் விசுவாசத்தில் தளர்ந்து போகவில்லை. சோதனைகளின் அக்கினியில் புடம்போடப்பட்ட தங்கத்தைப் போல, அவர்களின் நம்பிக்கை மேலும் பிரகாசித்தது.
இன்று நாம் அனுபவிக்கும் விசுவாச சுதந்திரம், இப்படிப்பட்ட எண்ணற்ற தியாகங்களாலும், கண்ணீராலும், இரத்தத்தாலும் கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்டது. நமது முன்னால் மிஷனெரிகள், குருவானவர்கள் மற்றும் உபதேசியார்கள் பட்ட பாடுகளின் மேல் கிறிஸ்துவை மையமாக கொண்டு கட்டப்பட்டதே நமது திருநெல்வேலி திருச்சபை. எனவே, கிறிஸ்துவின் நாமத்தின் மாண்பைக் காத்துக்கொள்வதும், பிரிவினைகளையும் உலகப் போராட்டங்களையும் களைந்து, பரிசுத்தமும் அன்பும் நிறைந்த சாட்சிய வாழ்வு வாழ்வதும் நமது தலையாய கடமையாகும்.
